ஆம் ஆண்டுக்கான நிறந்தீட்டல் போட்டி 10.10.2023. இன்று இரண்டாவது நாளாக telipplai Little mastars montersoori இல் 3+ மாணவர்களுக்கு எமது நூலகத்தினால் நடத்தப்பட்டது.
உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, வலிகாமம் வடக்கு பிரதேச சபையினால் ஏற்படுத்தும் நோக்கில் இன்றைய தினம் மல்லாகம் விசாலாட்சி வித்தியாலயத்தில் இருந்து ஆரம்பித்து காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி வரை ஊர்தி நடைபவனி முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் கௌரவ தவிசாளர், கௌரவ உறுப்பினர்கள், செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், பாடசாலை சமூகத்தினர், தெல்லிப்பளை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து சிறப்பான பங்களிப்பை வழங்கினர்.
உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு வலி வடக்கு பிரதேச சபையினால் காங்கேசன்துறை கடற்கரை சிறுவர் பூங்கா பகுதியில் கௌரவ தவிசாளர் தலைமையில் மரநடுகை திட்டத்தை மேற்கொள்ளப்பட்டது.
வடமாகாண உள்ளுராட்சி மன்றங்களுக்கான(34) இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வானது கௌரவ வடமாகாண ஆளுநர் தலைமையில் கைதடியில் உள்ள வடமாகாண பிரதம செயலாளரின் கேட்போர் கூடத்தில் இன்று 01.03.2024 காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வடமாகாண உள்ளுரihட்சி அமைச்சின் செயலாளர், வடமாகாண பிரதம செயலாளர், உள்ளுராட்சி ஆணையார், பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர்கள் , உள்ளுராட்சி மன்ற செயலாளர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டிற்கமைவாக வாழ்வாதார உதவிகளை வழங்குவதனூடாக "அனைத்து வடிவங்களிலும் உள்ள வறுமையினை ஒழித்தல்" என்ற நிலைபேறான அபிவிருத்தி இலக்கினை அடைந்து கொள்ளும் முகமாக சபை எல்லைக்குள் வதியும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட ஒருவருக்கு கடந்த வாரம் ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டன.