உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, வலிகாமம் வடக்கு பிரதேச சபையினால் டெங்கு நோய் மற்றும் சிக்குன்குனியா தொடர்பாக

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, வலிகாமம் வடக்கு பிரதேச சபையினால் டெங்கு நோய் மற்றும் சிக்குன்குனியா தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இன்றைய தினம் மல்லாகம் விசாலாட்சி வித்தியாலயத்தில் இருந்து ஆரம்பித்து காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி வரை ஊர்தி நடைபவனி முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் கௌரவ தவிசாளர், கௌரவ உறுப்பினர்கள், செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், பாடசாலை சமூகத்தினர், தெல்லிப்பளை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து சிறப்பான பங்களிப்பை வழங்கினர்.

Translate »