வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கான கட்டணங்களை இனி வீட்டிலிருந்தபடியே Gov Pay இணைய வழியாக எளிதில் செலுத்தலாம்

வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கான கட்டணங்களை இனி வீட்டிலிருந்தபடியே Gov Pay இணைய வழியாக எளிதில் செலுத்தலாம். மேலதிக தகவலுக்கு www.govpay.lk எனும் இணையத்தளத்தினை பார்வையிடவும்

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, வலிகாமம் வடக்கு பிரதேச சபையினால் டெங்கு நோய் மற்றும் சிக்குன்குனியா தொடர்பாக

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, வலிகாமம் வடக்கு பிரதேச சபையினால் டெங்கு நோய் மற்றும் சிக்குன்குனியா தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இன்றைய தினம் மல்லாகம் விசாலாட்சி வித்தியாலயத்தில் இருந்து ஆரம்பித்து காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி வரை ஊர்தி நடைபவனி முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் கௌரவ தவிசாளர், கௌரவ உறுப்பினர்கள், செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், பாடசாலை சமூகத்தினர், தெல்லிப்பளை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து சிறப்பான பங்களிப்பை வழங்கினர்.

🌲🌲பசுமைப் போர் 🌲🌲

உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு வலி வடக்கு பிரதேச சபையினால் காங்கேசன்துறை கடற்கரை சிறுவர் பூங்கா பகுதியில் கௌரவ தவிசாளர் தலைமையில் மரநடுகை திட்டத்தை மேற்கொள்ளப்பட்டது.

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு வலிகாமம் வடக்கு பிரதேச சபையினால் இன்றையதினம் அளவெட்டி அருணோதயா பாடசாலையில் சுற்றுச்சூழல் தொடர்பாக மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதன் பதிவுகள்.

கேள்வி மனு கோரப்பட்டுள்ளது

வலிகாமம் வடக்கு பிரதேச சபையினால் பின்வரும் வேலைத்திட்டங்களிற்கான கேள்வி மனு கோரப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள கேள்விதாரர்கள் விண்ணப்பிக்க முடியும் என்பதை அறியத் தருகின்றேன்.

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் விளையாட்டு மைதானம் துப்பரவாக்கும் பணி முன்னெடுக்கப்படுகின்றது.

காங்கேசன்துறையில் அமைந்துள்ள வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் விளையாட்டு மைதானம் துப்பரவாக்கும் பணி முன்னெடுக்கப்படுகின்றது.

கலந்துரையாடல்

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் மற்றும் செயலாளர் தலைமையில், பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலை அதிபர்களுடன் பாடசாலைகளுக்கிடையேயான உள்ளூராட்சி வார போட்டிகள் மற்றும் பாடசாலைகளின் தேவைகள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.

களவிஜயம்

வலிவடக்கு பிரதேச சபையின் காங்கேசன்துறையில் அமைந்துள்ள தலைமை காரியாலயத்தின் தற்போதைய நிலைமை பற்றியும் , வறுத்தலைவிளானில் அமைந்துள்ள Night Soil Plant இனை இயங்கவைப்பது தொடர்பாகவும் 2025.08.28 ஆம் திகதி உள்ளூராட்சி ஆணையாளர், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மற்றும் பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் களவிஜயம் மேற்கொண்டனர்.

கலந்துரையாடல்

வலிகாமம் வடக்கு பிரதேச சபையினால் பாதீனியம், டெங்கு ஒழிப்பு மற்றும் கழிவகற்றல் தொடர்பாக சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களுடன் பிரதேச சபை சபா மண்டபத்தில் அன்மையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

Translate »