உலக வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் நிதியுதவியுடன் 2019 – 2024

உலக வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் நிதியுதவியுடன் 2019 – 2024 வரையான காலப்பகுதியில் உள்ளூராட்சி மன்றங்களில் மேற்கொள்ளப்பட்ட பிரதேச அபிவிருத்தி உதவித்திட்டத்தின் நிறைவு நாள் நிகழ்வு 2024.12.27 ஆம் திகதி பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதேச அபிவிருத்தி உதவித்திட்டத்தினூடான செயற்திட்டங்களை தரப்பட்ட கால எல்லைக்குள் பெளதிக ரீதியாகவும் நிதியியல் ரீதியாகவும் செயற்படுத்திய பிரதேச சபைகளுக்கு கெளரவ ஆளுநர் மெச்சுரை வழங்கி கெளரவித்தார். மேற்படி நிகழ்வில் வலிகாமம் வடக்கு பிரதேசசபைக்கும் மெச்சுரை வழங்கி பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்தாகும்.

https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fdrive.google.com%2Ffile%2Fd%2F1–7f6okzYGGWebPsWF8dNqXScV2HToXq%2Fview%3Fusp%3Ddrive_link%26fbclid%3DIwZXh0bgNhZW0CMTAAYnJpZBExeGszZ0JZZGdEcGVNdHd6dnNydGMGYXBwX2lkEDIyMjAzOTE3ODgyMDA4OTIAAR4W4Eu6Aw_EJj3Ocf2nr0i3XW59J5XkCUxEpboQ6QDk3zp_J-ajduR3GEGVHw_aem_DLsc9rn3hBJv9MQQu312Jg&h=AT2lqVqZso0iroHHuzIxkFcPAsIBRkdBfg1FOiWIhe-KrnsKtpwBUwUgwufm4okuF6fCNcjARZzSYRvWco5WQmA0rzpYUh9xRBVkVWoHrSt-Tmu7B8S-FMfRn-eWQIJ6EPP0_a68dt4CPYXnuw&__tn__=-UK-y-R&c[0]=AT2NcVqZxEC3xMZu5WYWiJeBmffKkMytsIw3XJ3C2EepAQbmh8bxB0-u5mBffmUQZerts9gwZn39cw4eEZAdp_EBbOwr_SJQ6Rr9cajgwJrXo2qF2_292CIJbHTiVPhrPgQom8rRTMv1UdtvoUPXt–1GnMmcd6YA2PtqZqrWUQHoraIyLq2en2BdhCrmSbkj7ZkmiZccXEWhVwNP3-VG7gOX98c9kSuca1jmiQPWpl4jnNqpg

மக்கள் பங்களிப்புடனான செயற்திட்டம்

மயிலிட்டித்துறை வடக்கு J/251 கிராம அலுவலர் பிரிவில் உள்ள வீதிகளுக்கான பெயர்ப்பலகை இடும் செயற்திட்டம் பிரதேச சபையின் வழிகாட்டல் மற்றும் அனுமதிக்கமைவாக மயிலிட்டி வடக்கு கிராம அபிவிருத்தி சங்கமும் பொதுமக்களும் இணைந்து அவர்களின் நிதிப்பங்களிப்பில் இத்திட்டத்தை முன்னுதாரணமாகவும் சிறப்பாக நிறைவேற்றியுள்ளார்கள்.
வாழ்த்துக்களும் நன்றிகளும்

2023 ஆம் ஆண்டில் தேசிய வாசிப்பு தேசிய ரீதியிலான சான்றிதழ்

வலி வடக்கு பிரதேச சபையின் கீழ் உள்ள அளவெட்டி பொதுநூலகமானது 2023 ஆம் ஆண்டில் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு சிறப்பான செயலாற்றுகையை மேற்கொண்டதைப் பாராட்டி தேசிய நூலகம் மற்றும் ஆவணவாக்கல் சபையினால் விருதும் பாராட்டுப்பத்திரமும் கொழும்பில் நடைபெற்ற தேசிய ரீதியிலான நிகழ்வில் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இவ் விருது மற்றும் சான்றிதழ்களை சபை சார்பில் நூலகர் திருமதி.த.போல் சுரேஸ் பெற்றுக்கொண்டார்.
இவ்விருது பெற உழைத்த உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் நன்றிகள்

தேசிய ரீதியில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றங்களின் 2023

தேசிய ரீதியில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றங்களின் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த கணக்கறிக்கை மற்றும் வருடாந்த அறிக்கைகள் தொடர்பான மதிப்பீட்டின் அடிப்படையில் எமது சபைக்கு இணக்கப்பாட்டிற்கான சான்றிதழ் (Certificate of Compliance) வழங்கி கெளரவிக்கப்பட்ட நிகழ்வு 2023.12.02 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றது. குறித்த சான்றிதழினை சபையின் செயலாளர் சார்பில் நிதி உதவியாளர் / கணக்குப்பகுதி தலைவர் பெற்றுக்கொண்டார்.

Translate »