
கொல்லங்கலட்டி சைவத்தமிழ் வித்தியாலய தரம் மூன்று மாணவர்களுக்கு வழங்கப்பட்ட படத்தை பார்த்து வசனம் எழுதுதல்.
Category: நிகழ்வுகள்
தேசிய வாசிப்பு மாதம் – 2023
ஆம் ஆண்டுக்கான நிறந்தீட்டல் போட்டி 10.10.2023. இன்று இரண்டாவது நாளாக telipplai Little mastars montersoori இல் 3+ மாணவர்களுக்கு எமது நூலகத்தினால் நடத்தப்பட்டது.
கேள்வி அறிவித்தல்
கேள்வி அறிவித்தல்
டெங்கு நோய் மற்றும் சிக்குன்குனியா தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு
உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, வலிகாமம் வடக்கு பிரதேச சபையினால்
ஏற்படுத்தும் நோக்கில் இன்றைய தினம் மல்லாகம் விசாலாட்சி வித்தியாலயத்தில் இருந்து ஆரம்பித்து காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி வரை ஊர்தி நடைபவனி முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் கௌரவ தவிசாளர், கௌரவ உறுப்பினர்கள், செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், பாடசாலை சமூகத்தினர், தெல்லிப்பளை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து சிறப்பான பங்களிப்பை வழங்கினர்.
🌲🌲பசுமைப் போர் 🌲🌲
உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு வலி வடக்கு பிரதேச சபையினால் காங்கேசன்துறை கடற்கரை சிறுவர் பூங்கா பகுதியில் கௌரவ தவிசாளர் தலைமையில் மரநடுகை திட்டத்தை மேற்கொள்ளப்பட்டது.

வடமாகாண உள்ளுராட்சி மன்றங்களுக்கான இணையத்தளம் அங்குரார்ப்பண நிகழ்வு
வடமாகாண உள்ளுராட்சி மன்றங்களுக்கான(34) இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வானது கௌரவ வடமாகாண ஆளுநர் தலைமையில் கைதடியில் உள்ள வடமாகாண பிரதம செயலாளரின் கேட்போர் கூடத்தில் இன்று 01.03.2024 காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வடமாகாண உள்ளுரihட்சி அமைச்சின் செயலாளர், வடமாகாண பிரதம செயலாளர், உள்ளுராட்சி ஆணையார், பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர்கள் , உள்ளுராட்சி மன்ற செயலாளர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.





வாழ்வாதார உதவிவழங்கல்
2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டிற்கமைவாக வாழ்வாதார உதவிகளை வழங்குவதனூடாக “அனைத்து வடிவங்களிலும் உள்ள வறுமையினை ஒழித்தல்” என்ற நிலைபேறான அபிவிருத்தி இலக்கினை அடைந்து கொள்ளும் முகமாக சபை எல்லைக்குள் வதியும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட ஒருவருக்கு கடந்த வாரம் ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டன.


தெல்லிப்பளை வீமன்காமம் சந்தை புனரமைப்பு
சபை ஆளுகைக்குட்பட்ட தெல்லிப்பளை பளைவீமன்காமம் பொதுச்சந்தையின் எல்லைமதில் மற்றும் புனரமைப்பு வேலைகள் நிறைவுபெற்று புதுப்பொலிவுடன் மக்கள் பாவனையில் (February 2024 )


உள்ளுராட்சி வாரத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட விளையாட்டு போட்டி
உள்ளூராட்சி மாதத்தினை முன்னிட்டு சனசமூக நிலையங்களை வலுப்படுத்துவதனூடாக அவற்றின் சபையுடனான ஒன்றிணைந்த செயற்பாடுகளை மேம்படுத்தல், சமூக பொறுப்பை வலிதாக்கல் மற்றும் சமுதாயத்தில் விளையாட்டினை ஊக்குவித்தல் ஆகியவற்றினை நோக்காக கொண்டு வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட சனசமூக நிலையங்களுக்கிடையில் ஒழுங்குபடுத்தப்பட்ட போட்டிகளில் 11.12.2023 நேற்றைய தினம் பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டி இடம்பெற்றது.




சபை ஊழியர்களுக்கான பயிற்சி நெறி
கடமைசார் விடயங்கள் தொடர்பில் அட்டவணைப் படுத்தப்படாத பதவியணியினருக்காக ஒழுங்கமைக்கப்பட்ட ஒருநாள் பயிற்சி வகுப்பு (கட்டம் 1) 15.12.2023இன்று வட மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகினால் நல்லூர் பிரதேச சபை பயிற்சி மண்டபத்தில் நடாத்தப்பட்டது.


