இலத்திரனியல் நூலக செயற்பாடு

2024 ஆம் ஆண்டின் இலத்திரனியல் நூலக செயற்பாட்டிற்கு முன்னோடியாக பெளதிக வசதிகளை அதிகரிக்கும் நோக்கில் தெல்லிப்பளை பொது நூலகத்தில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் பொது மக்களின் பார்வைக்கு

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

இன்றைய தினம் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்க வாலிபர்கள் இளவாலை கிராமத்தில் டெங்கு ஒழிப்பு செயல்திட்டத்தை சுயவூக்கத்தின் அடிப்படையில் மேற்கொண்டனர்.

நீர் தேங்கக்கூடிய டெங்கு நுளம்பு பரவ சாதகமான கொள்கலன்கள் சேகரிக்கப்பட்டு பிரதேசசபையிடம் ஒப்படைக்கப்பட்டது. மழையையும் பொருட்படுத்தாது பங்குகொண்ட வாலிபர்களுக்கும், சபை பணியாளர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். வலி வடக்கின் ஏனைய இளையோர் அமைப்பினரும் இவ்வாறான சூழல் சார் சமூக கடமைகளை ஆற்ற முன்வரவேண்டும் என்பதுடன் அதற்கு எப்போதும் பிரதேசசபை ஒத்துழைப்பை நல்க காத்திருக்கிறார்கள் என்பதையும் தங்களுக்கு அறியத்தருகின்றோம்.

சிரமதான நிகழ்வு

தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் MOTHER Sri Lanka உயர்தர மாணவர் மன்றம், மற்றும் மாணவர் பாராளுமன்றம் ஆகியோர் இணைந்து சபையின் பங்களிப்புடன் தெல்லிப்பளை கொத்தியாலடி இந்து மயானத்யில் சிரமதானப் பணியில் ஈடுபட்ட நிகழ்வின் பதிவுகள்

2023 ஆம் வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டு வேலைத்திட்டம்

2023 ஆம் வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளில் நிலையான வருமானத்தினை பெற்றுக் கொடுப்பதனூடாக வறுமையை ஒழிக்கும் பொருட்டு வாழ்வாதாரத்தினை பெற்றுக் கொடுக்கும் முகமாக வலிகாமம் வடக்கினுள் வசிக்கும் வறுமைக் கோட்டிற்குட்பட்ட இரண்டு பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

வரவு செலவு திட்ட வேலைகளை நடைமுறைப்படுத்தல்

வரவு செலவுத்திட்டம் 2023 ஆம் ஆண்டிற்கான வேலைத்திட்டங்களின் தொடர்ச்சியாக தற்பொழுது மயிலிட்டி உப அலுவலகத்தின் அபிவிருத்தி பணிகளுக்கான வேலைத்திட்டம் கேள்வி கோரப்பட்டுள்ளது.

ஆதனவரி அறவீடு நடமாடும் சேவை

சபையின் 2024ஆம் ஆய்டிற்கான தேனவரி அறவீட்டிற்கான நடமாடும் சேவைகள் தற்பொழுது மல்லாகம் உப அலுவலகத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் நடைபெற்று வருகின்றது. எனவே பொதுமக்கள் இதில் கலந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனi;.

தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்த்திட்டம்

நாட்டில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக பல உயிரிழப்புக்கள் நிகழ்ந்து வருகின்றது இதனை தடுக்கும் வகையில்தேசிய டெங்கு ஒழிப்பு திட்ட நிகழ்வுக்கு அமைவாக வலிகாமம் வடக்கு பிரதேசசபைக்கு எல்லைக்குட்பட்ட பொதுமக்களின் வாழ்விடங்களில் முப்படையினருடன் உத்தியோகத்தர்களும் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தேசிய வாசிப்பு மாத இறுதிநாள் நிகழ்வுகள்

2023ஆம் ஆண்டிற்கான தேசிய வாசிப்பு மாத இறுதிநாள் நிகழ்வும் சாதனைப்பெண்களை கௌரவிக்கும் நிகழ்வும் 02.02.2024 அன்று தெல்லிப்பளை இராஜேஸ்வரி மண்டபத்தில் சபையின் செயலாளர் சு.சுதர்ஜன் தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

Translate »