2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டிற்கமைய “சுகாதார வசதிகளுக்கான அணுகலினை ஏற்படுத்தி கொடுத்தல்” எனும் நிலைபேறான அபிவிருத்தி இலக்கினை அடையும் முகமாக எமது சபை எல்லைக்குள் வசிக்கும் அடிப்படை சுகாதார வசதிகளற்ற 04 வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்களுக்கும் 01 வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கும் கழிப்பறைகள் அமைப்பதற்கான நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது.
Author: webadmin
தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு நிகழ்வும் சாதனைப்பெண்கள் கெளரவிப்பு நிகழ்வும்
வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு நிகழ்வும் சாதனைப்பெண்கள் கெளரவிப்பு நிகழ்வும்
வலி வடக்கின் சாதனைப் பெண் விருது – 2024
வலிகாமம் வடக்கில் வசிக்கும் ஆர்வமும் தகுதியுமுள்ள பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
புனரமைப்பு வேலைகள் நிறைவுபெற்று புதுப்பொலிவுடன் தெல்லிப்பளை பளைவீமன்காமம் பொதுச்சந்தை
சபை ஆளுகைக்குட்பட்ட தெல்லிப்பளை பளைவீமன்காமம் பொதுச்சந்தையின் எல்லைமதில் மற்றும் புனரமைப்பு வேலைகள் நிறைவுபெற்று புதுப்பொலிவுடன் மக்கள் பாவனையில்
சிரமதானப் பணி நிகழ்வின் பதிவுகள்
தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் MOTHER Sri Lanka உயர்தர மாணவர் மன்றம், மற்றும் மாணவர் பாராளுமன்றம் ஆகியோர் இணைந்து சபையின் பங்களிப்புடன் தெல்லிப்பளை கொத்தியாலடி இந்து மயானத்யில் சிரமதானப் பணியில் ஈடுபட்ட நிகழ்வின் பதிவுகள்
தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன
2023 ஆம் வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளில் நிலையான வருமானத்தினை பெற்றுக் கொடுப்பதனூடாக வறுமையை ஒழிக்கும் பொருட்டு வாழ்வாதாரத்தினை பெற்றுக் கொடுக்கும் முகமாக வலிகாமம் வடக்கினுள் வசிக்கும் வறுமைக் கோட்டிற்குட்பட்ட இரண்டு பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கேள்வி கோரல்
பிரதேச அபிவிருத்தி உதவித்திட்டத்தினூடாக காங்கேசன்துறை சிறுவர் பூங்காவில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைக்கான கேள்வி கோரல்
கேள்வி கோரல்
சபை நிதியினூடாக மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கான கேள்வி கோரல்
❗️பொதுமக்களுக்கான அறிவித்தல்❗️
2024 ஆம் ஆண்டிற்கான ஆதன வரி செலுத்துவதனை இலகுபடுத்தும் நோக்கில் எமது சபையின் உப அலுவலகங்கள் எதிர்வரும் 27.01, 28.01 ஆகிய சனி மற்றும் ஞாயிறு தினங்களில் காலை 8.30 முதல் மாலை 04.30 வரை திறந்திருக்கும் என்பதுடன் நடப்பு ஆண்டிற்கான ஆதன வரியினை இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துவதன் மூலம் நடப்பு ஆண்டிற்கான ஆதனவரியிலிருந்து 10% கழிவினை பெற்றுக்கொள்ள முடியும் என்பதனையும் அறியத்தருகின்றோம்.
பகிரங்க ஏல அறிவித்தல் 2024
பொதுச்சந்தைகள், இறைச்சிக்கடைகள், கருவாட்டுக்கடைகள் என்பன குத்தகைக்கு / வாடகைக்கு விடுவதற்கான பகிரங்க ஏல அறிவித்தல் 2024
