புதுப்பொலிவுடன்
டிஜிட்டல் உலகுடன் இணைகிறது தெல்லிப்பளை பொதுநூலகம்
இன்று இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வின் நிழற்படங்கள்.
Author: webadmin
திறப்பு விழா
தெல்லிப்பளை பொதுநூலக டிஜிட்டல் அறிவு மையம் மற்றும் நுழைவாயில் வளைவு திறப்பு விழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
குடிநீர் விநியோகம் தொடர்பான கலந்துரையாடல்
இளவாலை வசந்தபுரம்(J/222) கிராமத்திற்கான குழாய் மூலமான குடிநீர் விநியோகம் தொடர்பான கலந்துரையாடலும், காலநிலை மாற்றம் மற்றும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய தேவை தொடர்பான விழிப்புணர்வு கருத்துக்களும் வழங்கப்பட்டு குறித்த பிரதேசத்திற்கான குடிநீர் பயன்பாட்டு மேற்பார்வை குழுவும் தெரிவுசெய்யப்பட்டது.
விண்ணப்பங்கள் கோரல்
கீரிமலை அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தில் பாரம்பரிய உணவுகளை தயாரித்து விற்பனை செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரல்.
கேள்வி கோரல்
கேள்வி கோரல்
🗑️🚮 நாங்கள் பணம் தருகின்றோம் நீங்கள் கழிவுகளை தரம்பிரித்து எம்மிடம் தாருங்கள் 🚮🗑️
🗑️🚮 நாங்கள் பணம் தருகின்றோம் நீங்கள் கழிவுகளை தரம்பிரித்து எம்மிடம் தாருங்கள் 🚮🗑️
———
♦️ எமது சபையின் மல்லாகம் பொதுச்சந்தை வளாகத்தில் “பெறுமதி” எனும் பெயருடன் அமைக்கப்பட்டுள்ள தரம்பிரிக்கப்பட்ட திண்மக்கழிவு சேகரிக்கும் நிலையத்தினை யாழ் மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு.பொ.ஸ்ரீவர்ணன் அவர்களுடன் தெல்லிப்பளை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி திரு.ப.நந்தகுமார் மற்றும் Save a Life நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் திரு.க.ராகுலன் ஆகியோர் இணைந்து இன்று திறந்து வைத்தார்கள்.
♦️ குறித்த நிகழ்வில் எமது சபையின் சேதனப்பசளை உற்பத்தி நிலையத்திலிருந்து தயாரிக்கப்படும் “பசுமை” இயற்கை பசளை அறிமுக நிகழ்வும், உலக மண் தின வெற்றியாளர்களுக்கான பாராட்டு பத்திரமும் வழங்கப்பட்டது.
♦️ தரம்பிரிக்கப்பட்ட திண்மக்கழிவுகள் சேகரிப்பு நிலையத்தில் பொதுமக்கள் கழிவுகளை வழங்கி பதிவு அட்டையை பெற்றுக்கொள்வதன் மூலமாக அவர்களால் வழங்கப்படும் கழிவுகளின் நிறைக்கேற்ற கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள முடியும்.
⏰️🗓 மேற்படி நிலையமானது திங்கள் முதல் வியாழன் வரையான நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 4.00 மணி வரையும் சனிக்கிழமைகளில் காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையும் திறந்திருக்கும் என்பதுடன் பொதுமக்கள் அனைவரும் தங்களால் வழங்கப்படும் கழிவுகளை தரம்பிரித்து வழங்கி எமது பிரதேசத்தினை தூய்மையாக வைத்திருக்க உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கேள்வி கோரல்
பிரதேச அபிவிருத்தி உதவித்திட்டத்தினூடாக மேற்கொள்ளப்படவுள்ள இக்கிரானை வீதி திருத்த வேலைக்கான கேள்வி கோரல்
அங்குரார்ப்பண வைபவம்
தரம்பிரிக்கப்பட்ட திண்மக்கழிவுகள் சேகரிப்பு நிலைய 
உள்ளூராட்சி மன்றங்களின் செயற்திறனை மதிப்பிடும் முகமாக சகல உள்ளூராட்சி மன்றங்களிலும் மேற்கொள்ளப்பட்ட செயற்திறன் மதிப்பீடு 2023
உள்ளூராட்சி மன்றங்களின் செயற்திறனை மதிப்பிடும் முகமாக சகல உள்ளூராட்சி மன்றங்களிலும் மேற்கொள்ளப்பட்ட செயற்திறன் மதிப்பீடு 2023 இல் மாகாண ரீதியில் சிறந்த பெறுபேறுகளை பெற்று தேசிய ரீதியிலான மதிப்பீட்டிற்கு எமது சபை தெரிவாகியிருந்த நிலையில் குறித்த மதிப்பீட்டிற்காக பொது நிருவாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் ஒழுங்குபடுத்தப்பட்ட அதிகாரிகள் இன்று எமது அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தனர்.
பெண்கள் வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டம்
பெண்கள் வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் எமது சபை எல்லைக்குட்பட்ட ஆர்வமுடைய தரப்பினரிடமிருந்து பெண்கள் சார்ந்த கருப்பொருளில் குறுந்திரைப்படவாக்கம், தனி நடிப்பு மற்றும் கவிதையாக்கம் என்பவற்றிற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
