🗑️🚮 நாங்கள் பணம் தருகின்றோம் நீங்கள் கழிவுகளை தரம்பிரித்து எம்மிடம் தாருங்கள் 🚮🗑️
———
♦️ எமது சபையின் மல்லாகம் பொதுச்சந்தை வளாகத்தில் “பெறுமதி” எனும் பெயருடன் அமைக்கப்பட்டுள்ள தரம்பிரிக்கப்பட்ட திண்மக்கழிவு சேகரிக்கும் நிலையத்தினை யாழ் மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு.பொ.ஸ்ரீவர்ணன் அவர்களுடன் தெல்லிப்பளை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி திரு.ப.நந்தகுமார் மற்றும் Save a Life நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் திரு.க.ராகுலன் ஆகியோர் இணைந்து இன்று திறந்து வைத்தார்கள்.
♦️ குறித்த நிகழ்வில் எமது சபையின் சேதனப்பசளை உற்பத்தி நிலையத்திலிருந்து தயாரிக்கப்படும் “பசுமை” இயற்கை பசளை அறிமுக நிகழ்வும், உலக மண் தின வெற்றியாளர்களுக்கான பாராட்டு பத்திரமும் வழங்கப்பட்டது.
♦️ தரம்பிரிக்கப்பட்ட திண்மக்கழிவுகள் சேகரிப்பு நிலையத்தில் பொதுமக்கள் கழிவுகளை வழங்கி பதிவு அட்டையை பெற்றுக்கொள்வதன் மூலமாக அவர்களால் வழங்கப்படும் கழிவுகளின் நிறைக்கேற்ற கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள முடியும்.
⏰️🗓 மேற்படி நிலையமானது திங்கள் முதல் வியாழன் வரையான நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 4.00 மணி வரையும் சனிக்கிழமைகளில் காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையும் திறந்திருக்கும் என்பதுடன் பொதுமக்கள் அனைவரும் தங்களால் வழங்கப்படும் கழிவுகளை தரம்பிரித்து வழங்கி எமது பிரதேசத்தினை தூய்மையாக வைத்திருக்க உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
