🌍🏞️ “உலக மண்” தினத்தினை முன்னிட்டு மாகாண விசாய அமைச்சின் “சூழலை நேசிப்போம்” திட்டத்தின் “எமது கிராமத்தினை பிளாஸ்ரிக் கழிவுகளற்ற பசுமையான அழகான கிராமமாக மாற்றியமைப்போம்” எனும் எண்ணக்கருவிற்கமைய எமது சபைக்குட்பட்ட மாவைபாரதி சனசமூக நிலையத்தினர் மற்றும் பாடசாலை மாணவர்கள் எமது சபையுடன் இணைந்து குறித்த விடயம் தொடர்பாக பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் முகமாக ஓவியம் வரைதல் 🎨🖌️, மரம் நடுகை 🌱 மற்றும் விழிப்புணர்வு செயற்பாடுகள் என்பவற்றை முன்னெடுத்திருந்தனர்.
(2023.11.13 – 2023.11.22)
Category: நிகழ்வுகள்
கேள்வி அறிவித்தல் – 2024
பொதுச்சந்தைகள், இறைச்சிக்கடைகள், கருவாட்டுக்கடைகள், வாகனத்தரிப்பிடம் என்பன குத்தகைக்கு / வாடகைக்கு விடுவதற்கான கேள்வி அறிவித்தல் – 2024
சீராவளை சேதனப்பசளை உற்பத்தி நிலையம்
உலக வங்கியின் நிதியினூடாக நடைமுறைப்படுத்தப்படும் பிரதேச அபிவிருத்தி உதவித்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக உலக வங்கியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினர் 2023.11.23 ஆம் திகதி சீராவளை சேதனப்பசளை உற்பத்தி நிலையத்தினை பார்வையிட்டனர்.
🖊 📋 2024 ஆம் ஆண்டிற்கான வழங்குநர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
🖊 📋 2024 ஆம் ஆண்டிற்கான வழங்குநர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
🗓விண்ணப்பிக்க விரும்பும் தகைமை வாய்ந்த வழங்குநர், ஒப்பந்ததாரர்கள் 2023.12.28 ஆம் திகதி பி.ப 2.00 மணிக்கு அல்லது அதற்கு முன்னர் விண்ணப்பங்களை சமர்ப்பித்து தங்களை பதிவு செய்து கொள்ள முடியும்.
தேசிய வாசிப்பு மாதம் 2023
தேசிய வாசிப்பு மாதம் 2023
வலிகாமம் வடக்கு பிரதேச சபை.
பொது நூலகம்
அளவெட்டி.
*மனித வாழ்வின் பிரச்சனைகளுக்கு தற்கொலை ஒரு தீர்வல்ல விழிப்புணர்வு நிகழ்வு.
நிகழ்வு ஒழுங்கமைப்பு.
திருமதி த. போல் சுரேஷ்.
நூலகர்
பொது நூலகம் அளவெட்டி.
வளவாளர்.
திரு. ம. தசி தரன்
அபிவிருத்தி உத்தியோகத்தர்.
வலிகாமம் வடக்கு பிரதேச சபை.
மல்லாகம் மகா வித்தியாலயம்.
29/11/2023.
2024 இல் எண்ணிம (Digital) மயமாகவுள்ள தெல்லிப்பளை பொது நூலகம்
2024 இல் எண்ணிம (Digital) மயமாகவுள்ள தெல்லிப்பளை பொது நூலகம்
ஆசிய அமைப்பு மற்றும் எமது சபையின் நிதிப்பங்களிப்பினூடாக நல்லாட்சிக்கான புத்தாக்க நிறுவனத்தினால் நூலகங்களை டிஜிற்றல் மயமாக்கும் திட்டத்தின் கீழ் எமது சபைக்கு சொந்தமான தெல்லிப்பளை பொதுநூலகத்தில் Digital Knowledge Centre இனை அமைப்பது தொடர்பிலான பூர்வாங்க திட்டமிடல் கலந்துரையாடல் இன்று தெல்லிப்பளை பொதுநூலகத்தில் இடம்பெற்றது.
Scratch மென்பொருளின் வழியேயான காட்சிகள் வடிவமைத்தல் தொடர்பிலான ஒருநாள் பயிற்சி பட்டறை
உள்ளூராட்சி ஆணையாளரின் வழிகாட்டுதலின் கீழ் பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறன், சுயகற்றல் மற்றும் புத்தாக்க சிந்தனையினை மேம்படுத்தும் நோக்கில் எமது சபையின் தெல்லிப்பளை பொதுநூலகத்தினால் யா/கட்டுவன்புலம் மகாவித்தியாலய மாணவர்களுக்கு Scratch மென்பொருளின் வழியேயான காட்சிகள் வடிவமைத்தல் தொடர்பிலான ஒருநாள் பயிற்சி பட்டறை ஒழுங்குபடுத்தப்பட்டிருந்ததுடன் குறித்த பயிற்சி பட்டறையில் பங்குகொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இதில் பங்குகொள்ள ஆர்வமுடைய வலிகாமம் வடக்கிலுள்ள பாடசாலைகள் தெல்லிப்பளை பொதுநூலகத்தினை தொடர்பு கொள்வதனூடாக குறித்த பயிற்சி பட்டறையில் இணைந்து கொள்ளமுடியும்.
2023 ஆண்டிற்கான உலக நகர திட்டமிடல் தினத்தினை முன்னிட்டு வடக்கு மாகாண நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நடாத்தப்படும் புகைப்பட போட்டி 📸
2023 ஆண்டிற்கான உலக நகர திட்டமிடல் தினத்தினை முன்னிட்டு வடக்கு மாகாண நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நடாத்தப்படும் புகைப்பட போட்டி 📸
வட மாகாணத்திலுள்ள 15 வயதுக்கு மேற்பட்ட ஆர்வமுடையவர்கள் நகரினை பிரதிபலிக்கும் புகைப்படங்களுடன் தங்களுடைய பெயர், தொலைபேசி இலக்கம் மற்றும் வசிக்கும் மாவட்டத்தின் பெயரினையும் குறிப்பிட்டு udanorthern@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 2023.11.08 ஆம் திகதி பி.ப 12.00 மணிக்கு முன்னர் அனுப்பி வைப்பதன் மூலம் குறித்த போட்டியில் பங்குபற்ற முடியும்.
மீள்கேள்வி அறிவித்தல் – 2024
பொதுச்சந்தைகள், இறைச்சிக்கடைகள் கருவாட்டுக்கடைகள் மற்றும் வாகனத்தரிப்படம் என்பவற்றினை குத்தகைக்கு / வாடகைக்கு விடுவதற்கான 
தேசிய வாசிப்பு மாதம் – 2023
தரம் 9,10 மாணவர்களுக்கு இன்று நடைபெற்ற கவிதை, கட்டுரை போட்டிகள்
