உள்ளூராட்சி ஆணையாளரின் வழிகாட்டுதலின் கீழ் பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறன், சுயகற்றல் மற்றும் புத்தாக்க சிந்தனையினை மேம்படுத்தும் நோக்கில் எமது சபையின் தெல்லிப்பளை பொதுநூலகத்தினால் யா/கட்டுவன்புலம் மகாவித்தியாலய மாணவர்களுக்கு Scratch மென்பொருளின் வழியேயான காட்சிகள் வடிவமைத்தல் தொடர்பிலான ஒருநாள் பயிற்சி பட்டறை ஒழுங்குபடுத்தப்பட்டிருந்ததுடன் குறித்த பயிற்சி பட்டறையில் பங்குகொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இதில் பங்குகொள்ள ஆர்வமுடைய வலிகாமம் வடக்கிலுள்ள பாடசாலைகள் தெல்லிப்பளை பொதுநூலகத்தினை தொடர்பு கொள்வதனூடாக குறித்த பயிற்சி பட்டறையில் இணைந்து கொள்ளமுடியும்.
