கர்ப்பிணி தாய்மாருக்குரிய மகப்பேற்றுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு

சகல வயதினருக்கும் ஆரோக்கியமான நல்வாழ்க்கையை உறுதிப்படுத்தல் என்ற நிலைபேறான அபிவிருத்தி இலக்கினை அடையும் பொருட்டு 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டிலிருந்து தாய் சேய் நலனினை மேம்படுத்தும் முகமாக கர்ப்பிணி தாய்மாருக்குரிய மகப்பேற்றுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு சபையின் செயலாளரின் தலைமையில் இன்று வலிகாமம் வடக்கு பிரதேசசபை தலைமையலுவலகத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் குடும்பநல உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டிருந்த நிலையில் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் வசிக்கும் 35 கர்ப்பிணி தாய்மார்களுக்கு தலா ரூபா 10,000.00 பெறுமதியான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

Translate »