தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பயணிக்கும் வலி வடக்கு மற்றும் வலி தெற்கு பிரதேசத்தின் பிரதான வீதிகளை (RDA Roads) இணைக்கும் சபை வீதியான இக்கிரானை வீதியினை (வட்டாரம் 21, J/212) பிரதேச அபிவிருத்தி உதவித் திட்டத்தினூடாக புனரமைக்கும் வேலைகள் ஆரம்பமாகியுள்ளன. இதற்கான வேலைத்திட்ட ஆரம்ப கலந்துரையாடலானது (Kick-off Meeting) நாளை மு.ப 10.00 மணிக்கு வலிகாமம் வடக்கு பிரதேசசபை தலைமையலுவலக சபாமண்டபத்தில் இடம்பெறவுள்ளதால் ஆர்வமுடையவர்களை குறித்த கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
