தேசிய வாசிப்பு மாதம் – 2023

தேசிய வாசிப்பு மாதம் – 2023ஐ முன்னிட்டு வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் காங்கேசன்துறை பொது நூலகத்தால் நூலகத்திற்கு வரமுடியாத எமது மூத்த வாசகர்களை இனங்கண்டு வாசிக்கும் சூழலை உருவாக்கும் முகமாக இறுதி மூச்சுள்ளரை வாசிப்போம் எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற நடமாடும் நூலக சேவை நிகழ்வுகள்

தேசிய வாசிப்பு மாதம் – 2023

தேசிய வாசிப்பு மாதம் – 2023 ஐ முன்னிட்டு வலிகாமம் வடக்கு பிரதேச சபை காங்கேசன்துறை பொது நூலகத்தால் மாணவர்களிடையே அறிவுத்திறனை விருத்தி செய்யும் முகமாக நூலகத்தில் முன்பள்ளி சிறார்களிடையே ஆத்திசூடி கொன்றைவேந்தன் திருக்குறள் மனனப் போட்டி நிகழ்வுகள் நடைபெற்றபோது.

📣 உள்ளூராட்சி வார விளையாட்டு விழா மற்றும் கலைப்போட்டிகள் 2023🏅🏆🚴‍♂️🏏

உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு வலிகாமம் வடக்கு எல்லைக்குட்பட்ட சனசமூக நிலையங்களுக்கிடையில் போட்டிகள் நடாத்தப்பட இருப்பதனால் ஆர்வமுடைய சனசமூக நிலையங்கள் குறித்த போட்டிகளில் பங்குகொள்ள முடியும். ஏற்கனவே தங்களுடைய சனசமூக நிலையங்களுக்கு நேரடியாக அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளதால் விரைவாக விண்ணப்பங்களை சமர்ப்பித்து போட்டிகளில் பங்குபற்றுவதனை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தேசிய வாசிப்பு மாதம் – 2023

தேசிய வாசிப்பு மாதம் – 2023 ஐ முன்னிட்டு வலிகாமம் வடக்கு பிரதேச சபை காங்கேசன்துறை பொது நூலகத்தால் மாணவர்களிடையே அறிவுத்திறனை அதிகரிக்கும் முகமாக நூலகத்தில் உயர்தர மாணவர்களுக்கு பொது அறிவு வினாடி வினா போட்டி நிகழ்வுகள் நடைபெற்றபோது.

தேசிய வாசிப்பு மாதம் – 2023

தேசிய வாசிப்பு மாதம் – 2023 ஐ முன்னிட்டு வலிகாமம் வடக்கு பிரதேச சபை காங்கேசன்துறை பொது நூலகத்தால் சிறுவர்களிடையே வாசிப்புத் திறனை அதிகரிக்கும் முகமாக நூலகத்தில் வாசிப்புப் போட்டி நிகழ்வுகள் நடைபெற்றபோது.

முப்பத்து மூன்று ஆண்டுகளின் பின்னர்

எமது காங்கேசன்துறை உப அலுவலகம் மற்றும் பொது நூலகம் என்பன
காங்கேசன்துறையிலமைந்துள்ள
சபையின் சொந்த கட்டிடத்தில் சம்பிரதாய முறைப்படி மீள்பிரவேசித்த நிகழ்வின் பதிவுகள்
தொடர்ந்து நீடித்து நிலைத்து சேவையாற்ற பொதுமக்களின் ஆதரவையும் பங்களிப்பையும் வேண்டி நிற்கின்றோம்.

பேரூந்து தரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது

மயிலிட்டியைச் சேர்ந்த அமரர் இராசரத்தினம் சின்னத்தங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக மயிலிட்டி பகுதியில் அமைக்கப்பட்ட பேரூந்து தரிப்பு நிலையம் 2023.10.10 அன்று எமது மயிலிட்டி உப அலுவலக பொறுப்பதிகாரியினால் .

Translate »