மக்களின் பாவனைக்காக துப்பரவு

இராணுவத்தினரால் வழிபாட்டிற்காக அனுமதிக்கப்பட்ட கீரிமலை கிருஸ்ணர் கோவில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையினால் மக்களின் பாவனைக்காக துப்பரவு செய்யப்பட்டது.

வலிகாமம் வடக்கு காங்கேசன்துறை கல்லூரி வீதி காப்பெட் வீதியாக நிர்மாணிக்கப்படுவதற்கான

வலிகாமம் வடக்கு காங்கேசன்துறை கல்லூரி வீதி காப்பெட் வீதியாக நிர்மாணிக்கப்படுவதற்கான பூர்வாங்க கள ஆய்வு பணிகளில் கௌரவ தவிசாளர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள்

வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் தவிசாளர் மற்றும் உபதவிசாளரினைத் தெரிவு

வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் தவிசாளர் மற்றும் உபதவிசாளரினைத் தெரிவு செய்யும் கூட்டமானது வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி.தேவந்தினி பாபு அவர்களின் தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது. இதில் தவிசாளராக சோமசுந்தரம் சுகிர்தன் அவர்களும் துணைத் தவிசாளராக பொன்னுத்துரை தங்கராசா அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வாழ்த்துக்கள்… இருவருக்கும் மற்றும் அனைத்து கெளரவ உறுப்பினர்களுக்கும்.

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் பராமரிப்பில் உள்ள கீரிமலை தீர்த்தக்கரை

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் பராமரிப்பில் உள்ள கீரிமலை தீர்த்தக்கரை மற்றும் புனித சுற்றுலத்தல பிரதேசத்தின் புனிதத்தை மேம்படுத்தும் நோக்கில் கடற்கரை பகுதிகளை அழகாக்கும் திட்டத்தின் அடிப்படையில் சபைநிதி மூலம் அமைக்கப்பட்ட மண்டப முன்மேடை மக்கள் பாவனைக்கு இன்று கையளிக்கப்படுகின்றது.
கீரிமலையின் புனிதத்தை தொடர்ந்தும் பேணவும் மேலதிக அபிவிருத்திகளை மேற்கொள்ளவும் சபை உறுதியாகவுள்ளதுடன் சேதங்கள் ஏற்படாது சுத்தமாக பேண பொதுமக்களின் பொறுப்புணர்வும் ஒத்துழைப்பும் பெரிதும் வேண்டப்படுகிறது.

சுயதொழில் பயிற்சி வழங்கல் நிகழ்வு

கெளரவமான மற்றும் ஆக்கத்திறனை ஊக்குவிக்கும் வேலைவாய்ப்பினையும் எல்லோரையும் உள்ளடக்கிய நிலைபேறான பொருளாதார வளர்ச்சியினையும் முன்னிறுத்தல் எனும் நிலைபேறான அபிவிருத்தி இலக்கினை அடைந்து கொள்ளும் முகமாக தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஐந்து நாட்களுக்கான சுயதொழில் பயிற்சி வழங்கல் நிகழ்வு நேற்றைய தினம் வலிகாமம் வடக்கு பிரதேசசபை தலைமையலுவலகத்தில் ஆரம்பமானது.

Clean Sri Lanka

Clean Sri Lanka செயற்திட்டத்தின் கீழ் படையினரின் பங்களிப்புடன் சபை எல்லைக்குட்பட்ட பலாலி வீதியின் இருமருங்கும் நேற்றைய தினம் துப்பரவு செய்யப்பட்டது.

வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டிற்கமைவாக சமூக அபிவிருத்தியினுள் வறுமையை ஒழித்தல்

வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டிற்கமைவாக சமூக அபிவிருத்தியினுள் வறுமையை ஒழித்தல், சுயதொழில் ஊக்குவிப்பதனூடாக பொருளாதாரத்தினை மேம்படுத்தல் ஆகிய நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடையும் பொருட்டு தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டிற்குட்பட்ட பயனாளிகளுக்கு கோழி, கோழிக்கூடு, கோழித் தீவனம், கோழி வளர்ப்பு உபகரணங்கள் என்பன வழங்கப்பட்டன.

2025 ஆம் ஆண்டின் முதலாவது வேலைநாளில் வைபவ ரீதியாக கடமைகள் ஆரம்பிக்கப்பட்டன.

2025 ஆம் ஆண்டின் முதலாவது வேலைநாளில் வைபவ ரீதியாக கடமைகள் ஆரம்பிக்கப்பட்டன.
அரசின் “கிளீன் சிறிலங்கா” வேலைத்திட்டத்தில் சபையின் பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்பான சேவைக்கு சத்தியப்பிரமாணத்துடன் உறுதி எடுக்கப்பட்டது.

Translate »