2023 ஆம் ஆண்டின் செயற்பாடுகளுக்கமைய சனசமூக நிலையங்களை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற தரப்படுத்தல்

2023 ஆம் ஆண்டின் செயற்பாடுகளுக்கமைய சனசமூக நிலையங்களை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற தரப்படுத்தல் அடிப்படையில் கலைநகர், அளவெட்டி தெற்கு கலைவாணி சனசமூக நிலையம் முதலாம் இடத்தினையும் பன்னாலை கணேசா சனசமூக நிலையம் இரண்டாவது இடத்தினையும் தெல்லிப்பளை கிழக்கு திருமகள் சனசமூக நிலையம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டுள்ளன என்பதுடன்
A தரத்தில் 2 சனசமூக நிலையங்களும்,
B தரத்தில்18 சனசமூக நிலையங்களும்,
C தரத்தில் 20 சனசமூக நிலையங்களும்,
D தரத்தில் 35 சனசமூகநிலையங்களும்,
E தரத்தில் 9 சனசமூக நிலையங்களும் தரநிலையடைந்துள்ளன.
குறித்த சனசமூக நிலையங்களுக்கான சபைநிதியிலிருந்து வழங்கப்படும் ஊக்குவிப்புத் தொகையானது உரிய சனசமூக நிலையங்களின் வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

பயிற்சி பட்டறை

தெல்லிப்பளை பொதுநூலகத்தில் நடாத்தப்படும் Scratch மென்பொருளின் வழியேயான காட்சிகள் வடிவமைத்தல் தொடர்பிலான பயிற்சி பட்டறை நேற்றைய தினம் இடம்பெற்றது. இதில் யா/கட்டுவன்புலம் மகாவித்தியாலய மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

அனர்த்தகால தீயணைப்பு தொடர்பான பயிற்சி

அனர்த்தகால தீயணைப்பு தொடர்பான பயிற்சி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அனுசரணையுடன் பொது தனியார் பங்களிப்பு எண்ணக்கருவின் கீழ் எமது சபையின் காங்கேசன்துறை வளாகத்தில் நடைபெற்றது.

கலந்துரையாடல்

சுயதொழில்முனைவோரை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களின் தேவைப்பாடுகளை அறிந்து வசதிப்படுத்தும் முகமாகவும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் அறிவுறுத்தலுக்கமையவும் காங்கேசன்துறை நகர ஆட்டோ தரிப்பிட அனுமதிகள் தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடல்

சுற்றாடல் தொடர்பிலான விழிப்புணர்வு

சுற்றாடல் தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக யா/வீமன்காமம் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு திரைக்காட்சி, துண்டுப்பிரசுரங்களினூடாக சுற்றாடல்சார் கருத்துரைகள் வழங்கப்பட்டதுடன், போட்டிகள் நடத்தப்பட்டு பரிசில்களும் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது. மேலும் மரநடுகையை ஊக்குவிக்கும் செயற்பாடுகளும் இடம்பெற்றன.

“பயனுறுதி மிக்க நிலப்பயன்பாட்டின் ஊடாக நலம் நிறைந்த நாடு”

“பயனுறுதி மிக்க நிலப்பயன்பாட்டின் ஊடாக நலம் நிறைந்த நாடு” எனும் தொனிப்பொருளினூடாக கொண்டாடப்படும் உலக சுற்றாடல் தின நிகழ்வின் தொடர்ச்சியாக உலக வெப்பமயமாதலை குறைக்கும் முகமாக எமது சுற்றாடலில் மரங்களினை வளர்ப்பதன் முக்கியத்துவத்தினை உணர்த்தும் பொருட்டு எமது சபையின் காங்கேசன்துறை உப அலுவலக வளாகத்தில் மரங்கள் நாட்டப்பட்டன.

“பயனுறுதி மிக்க நிலப்பயன்பாட்டின் ஊடாக நலம் நிறைந்த நாடு”

“பயனுறுதி மிக்க நிலப்பயன்பாட்டின் ஊடாக நலம் நிறைந்த நாடு” எனும் தொனிப்பொருளினூடாக இன்றைய தினம் உலகளாவிய ரீதியில் சுற்றாடல் தினம் கொண்டாடப்படுகின்றது.

உள்ளூர் உற்பத்திக்கோர் திறவுகோல்

🔹️ உள்ளூர் உற்பத்திக்கோர் திறவுகோல்
Farm to Gate🔹️
🗣 உங்களுடைய உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகளை முற்றிலும் இலவசமாக விளம்பரப்படுத்தி சந்தைப்படுத்துவற்கான ஓர் அரிய வாய்ப்பு❕️
▶️ இதற்காக நீங்கள் செய்ய வேண்டியவை……..
1️⃣ Farm to gate இன் இணையத்தளத்திற்குள் பிரவேசியுங்கள்.
2️⃣ தங்களது விபரங்களை பதிவு செய்வதன் மூலம் பயனாளர் பெயர் (User name), கடவுச்சொல் (Password) என்பவற்றை பெற்றுக்கொள்ளுங்கள்.
3️⃣ தங்கள் தேசிய அடையாள அட்டையின் இரு பக்கங்களையும், தங்கள் தொலைபேசி இலக்கத்தினையும் 0707213728 என்னும் Whatsapp இலக்கத்திற்கு அல்லது npfarmtogate@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
4️⃣ தங்கள் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டு அனுமதி கிடைக்கப்பெற்றதும் தங்கள் பொருட்கள் சேவைகளை எவ்வித கட்டணங்களுமின்றி விளம்பரப்படுத்தலாம்.
♦️ சுயமாக இணையத்தளத்தினை அணுக இயலாதவர்கள் வடமாகாணத்திலுள்ள எந்த ஓர் உள்ளூராட்சி மன்றத்திற்கும் சென்று பதிவினை மேற்கொண்டு தங்களது வியாபார நடவடிக்கையினை மேற்கொள்ளலாம்.
🌐 வடமாகாணத்தின் farm to gate என்னும் இலவச சந்தைப்படுத்தல் தளம் உங்கள் கைகளில்.
🖇https://m.facebook.com/events/1913730532432169?mibextid=Nif5oz
🎯 உங்கள் உற்பத்திகளுக்கான நியாயமான சந்தை வாய்ப்பினை பெற்றுக்கொள்ளலாம்.

இலத்திரனியல் சாதனங்கள், தளபாடங்கள் முறைப்படி கையளிக்கும் நிகழ்வின் பதிவு

ஆசிய மன்றத்தின் நிதிபங்களிப்பில் Centre for Governance Innovations (CGI) அமைப்பினரால் தெல்லிப்பளை பொதுநூலக Digital knowledge center இற்கான 1.8 மில்லியன் பெறுமதியான இலத்திரனியல் சாதனங்கள், தளபாடங்கள் முறைப்படி கையளிக்கும் நிகழ்வின் பதிவு
நன்றி
ASIA FOUNDATION & CGI

Translate »