2024 ஆம் ஆண்டின் இலத்திரனியல் நூலக செயற்பாட்டிற்கு

2024 ஆம் ஆண்டின் இலத்திரனியல் நூலக செயற்பாட்டிற்கு முன்னோடியாக பெளதிக வசதிகளை அதிகரிக்கும் நோக்கில் தெல்லிப்பளை பொது நூலகத்தில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் பொது மக்களின் பார்வைக்கு

வலிகாமம் வடக்கு பிரதேச சபை நடாத்தும் “சாதனைப் பெண்கள்” கெளரவிப்பு விழாவும் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு நிகழ்வும் 2023

வலிகாமம் வடக்கு பிரதேச சபை நடாத்தும் “சாதனைப் பெண்கள்” கெளரவிப்பு விழாவும் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு நிகழ்வும் 2023
📌 இராஜேஸ்வரி திருமண மண்டபம், தெல்லிப்பளை
🗓 2023.12.19, செவ்வாய்க்கிழமை
⏰️ மு.ப 09.01
🙏 அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

கடமைசார் விடயங்கள் தொடர்பில் அட்டவணைப் படுத்தப்படாத பதவியணியினருக்காக ஒழுங்கமைக்கப்பட்ட ஒருநாள் பயிற்சி வகுப்பு

கடமைசார் விடயங்கள் தொடர்பில் அட்டவணைப் படுத்தப்படாத பதவியணியினருக்காக ஒழுங்கமைக்கப்பட்ட ஒருநாள் பயிற்சி வகுப்பு (கட்டம் 1) இன்று வட மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகினால் நல்லூர் பிரதேச சபை பயிற்சி மண்டபத்தில் நடாத்தப்பட்டது.

உள்ளூராட்சி மாதத்தினை முன்னிட்டு பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டி

உள்ளூராட்சி மாதத்தினை முன்னிட்டு சனசமூக நிலையங்களை வலுப்படுத்துவதனூடாக அவற்றின் சபையுடனான ஒன்றிணைந்த செயற்பாடுகளை மேம்படுத்தல், சமூக பொறுப்பை வலிதாக்கல் மற்றும் சமுதாயத்தில் விளையாட்டினை ஊக்குவித்தல் ஆகியவற்றினை நோக்காக கொண்டு வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட சனசமூக நிலையங்களுக்கிடையில் ஒழுங்குபடுத்தப்பட்ட போட்டிகளில் நேற்றைய தினம் பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டி இடம்பெற்றது.

வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் 2024 ஆம் ஆண்டிற்கான வரைபு வரவு செலவுத்திட்டம்.

வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் 2024 ஆம் ஆண்டிற்கான வரைபு வரவு செலவுத்திட்டம்.
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் (வரைபு) 1987ம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேசசபை சட்டப்பிரிவு 168க்கமைய தயாரிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கும் அபிப்பிராயங்களுக்குமாக 2023.12.09 ஆம் திகதியிலிருந்து 2023.12.18 ஆம் திகதி வரை வலிகாமம் வடக்கு பிரதேச சபை தலைமை அலுவலகம், உப அலுவலகங்கள் மற்றும் பொது நூலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் குறித்த வரைபு வரவு செலவுத்திட்டத்தினை கீழுள்ள QR Code இனை Scan செய்வதன் மூலமாகவோ அல்லது கீழுள்ள இணைப்பினுள் பிரவேசிப்பதனூடாகவோ பார்வையிட்டு பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்க முடியும்.
https://drive.google.com/…/1FN5VoFCivyKJLZe4Mqx…/view…

தேசிய ரீதியில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றங்களின் 2022 ஆண்டிற்கான சிறந்த கணக்கறிக்கை மற்றும் வருடாந்த அறிக்கைகள் தொடர்பான மதிப்பீட்டு

தேசிய ரீதியில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றங்களின் 2022 ஆண்டிற்கான சிறந்த கணக்கறிக்கை மற்றும் வருடாந்த அறிக்கைகள் தொடர்பான மதிப்பீட்டு அடிப்படையில் எமது சபைக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட நிகழ்வு 2023.12.04 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றது. குறித்த விருதினை சபையின் செயலாளர் சார்பில் உள்ளக கணக்காய்வாளர் பெற்றுக்கொண்டார்.

சர்வதேச மண்தினத்தையொட்டி “சூழலை நேசிப்போம்” திட்டத்தின் “

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் வழிகாட்டலில் சர்வதேச மண்தினத்தையொட்டி உள்ளூராட்சி திணைக்களம் மற்றும் விவசாய அமைச்சு இணைந்து நடாத்திய “சூழலை நேசிப்போம்” திட்டத்தின் “எமது கிராமத்தினை பிளாஸ்ரிக் கழிவுகளற்ற பசுமையான அழகான கிராமமாக மாற்றியமைப்போம்” எனும் எண்ணக்கருவினை வெளிப்படுத்தல் தொடர்பான போட்டியில் மாவைபாரதி சனசமூகநிலைய மாணவர்கள் 85 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் மூன்றாவது நிலையடைந்தமைக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கின்றோம்.
மாவட்ட ரீதியிலான மதிப்பீட்டின் போது ஆரம்ப திட்டமிடல் கூட்டத்தினை திறம்பட நடாத்தியமைக்கு 28 புள்ளிகளையும்
மரக்கன்று நாட்டும் செயற்பாட்டிற்கு 14 புள்ளிகளையும் விழிப்புணர்வு செயற்றிட்டங்களை முன்னெடுத்தமைக்கு 24 புள்ளிகளையும் சுவர் ஓவியம் வரைந்தமைக்காக 19 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

சர்வதேச மண் தினம்

மண் தினத்தையொட்டிய இரண்டாவது நிகழ்வாக சபை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின் இணைந்த பங்களிப்பில் சபை எல்லைக்குட்பட்ட பலாலி வீதியில் பிளாஸ்ரிக், பொலித்தீன் சேகரிப்பு நிகழ்வு

சர்வதேச மண் தினம்

சர்வதேச மண் தினத்தினையொட்டி மாவிட்டபுரம் கீரிமலை வீதியில் மரநடுகை நிகழ்வும் திண்மக்கழிவு சேகரிப்பு கொள்கலன்கள் வழங்கி வைத்தல் நிகழ்வின் பதிவுகள்

Translate »