வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் வழிகாட்டலில் சர்வதேச மண்தினத்தையொட்டி உள்ளூராட்சி திணைக்களம் மற்றும் விவசாய அமைச்சு இணைந்து நடாத்திய “சூழலை நேசிப்போம்” திட்டத்தின் “எமது கிராமத்தினை பிளாஸ்ரிக் கழிவுகளற்ற பசுமையான அழகான கிராமமாக மாற்றியமைப்போம்” எனும் எண்ணக்கருவினை வெளிப்படுத்தல் தொடர்பான போட்டியில் மாவைபாரதி சனசமூகநிலைய மாணவர்கள் 85 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் மூன்றாவது நிலையடைந்தமைக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கின்றோம்.
மாவட்ட ரீதியிலான மதிப்பீட்டின் போது ஆரம்ப திட்டமிடல் கூட்டத்தினை திறம்பட நடாத்தியமைக்கு 28 புள்ளிகளையும்
மரக்கன்று நாட்டும் செயற்பாட்டிற்கு 14 புள்ளிகளையும் விழிப்புணர்வு செயற்றிட்டங்களை முன்னெடுத்தமைக்கு 24 புள்ளிகளையும் சுவர் ஓவியம் வரைந்தமைக்காக 19 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
