இலத்திரனியல் குடிமக்கள் புள்ளி அட்டை (Electronic Citizen Report Card) E-CRC
உள்ளூராட்சி மன்றங்களினால் வழங்கப்படும் சேவைகளின் திருப்தி தொடர்பாக அறிந்து கொள்ளுதல், மக்களின் தேவைகளை அடையாளம் காணுதல் மற்றும் வருடாந்த வரவு செலவுத்திட்டத்தில் முன்னுரிமையளிக்க வேண்டிய விடயங்களை இனங்காணுதல் போன்ற நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக ஆசிய அமைப்பின் வழிகாட்டுதலின் கீழ் பயிற்சியளிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்ற உத்தியோகத்தர்களால் எமது சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களில் எழுமாற்றாக தெரிவு செய்யப்பட்டவர்களிடமிருந்து (100 – 120 பேர்) கிடைக்கப்பெற்ற கருத்துக்களை அடிப்படையாக கொண்டு பகுப்பாய்வு செய்ததன் மூலமாக கிடைக்கப்பெற்ற அறிக்கையினை எமது சபை உத்தியோகத்தர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலந்துரையாடலானது 2023.12.13 ஆம் திகதி எமது தலைமையலுவலகத்தில் இடம்பெற்றது. அக் கலந்துரையாடலின் பதிவுகள் மற்றும் கிடைக்கப்பெற்ற அறிக்கை என்பன பொதுமக்களின் அபிப்பிராயங்களை பெற்றுக் கொள்ளும் பொருட்டு தங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.





