#வலிகாமம் வடக்கில் #காணி விடுவிப்பு

#வலிகாமம் வடக்கில் #காணி விடுவிப்பு
வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் மக்களின் ஒரு தொகுதி காணிகள் இன்று (10 ஆம் திகதி) (ஞாயிறு) யாழ் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் விடுவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி,
காங்கேசன்துறை மத்தி (J/234), காங்கேசன்துறை தெற்கு (J/235) கிராம சேவையாளர் பிரிவுகளில் 515 பிரிகேட் தலமையகம் அமைந்திருந்த,52 குடும்பங்களுக்கு சொந்தமான 20.32 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.
வறுத்தலைவிளான் (J/241)கிராம சேவையாளர் பிரிவில் (HQ 9- v ) SLLI படைப்பிரிவினர் நிலைகொண்டிருந்த 21 குடும்பங்களுக்குச் சொந்தமான 23.36 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.
தென்மயிலை (J/240) கிராம சேவையாளர் பிரிவில் கெமுனு வோச் படைப்பிரிவு நிலைகொண்டிருந்த 41 குடும்பங்களுக்குச் சொந்தமான 25.02 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டுள்ளது.

Translate »