🌐 உள்ளூராட்சி மன்றங்களுக்கான இணையத்தள உருவாக்கம்
CDLG திட்டத்தினூடாக உள்ளூராட்சி ஆணையாளரின் வழிகாட்டுதலில் வட மாகாணத்திற்குட்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான இணையத்தளங்கள் உருவாக்கப்பட்டு 2024.03.01 ஆம் திகதியன்று வட மாகாண கெளரவ ஆளுநர் அவர்களால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதற்கமைய எமது சேவைகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக எமது இணையத்தள முகவரியான Valikamamnorth.ps.gov.lk இனுள் பிரவேசிப்பதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
மேலும் இணையத்தள வடிவமைப்பில் பங்குபற்றிய உத்தியோகத்தர்களுக்கு குறித்த அங்குரார்ப்பண நிகழ்வில் மெச்சுரை வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
