
காலநிலை சீரின்மையால் கீரிமலை தீர்த்தக்கேணியின் நீர்மட்டம் அசாதாரணமாக அதிகரித்துள்ளது. ஆதலால் முன்னெச்சரிக்கையாக பிரதேசசபையால் அனர்த்தங்களை தவிர்க்கும் பொருட்டு கேணியில் நீச்சலடிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடற் பகுதியில் நீராடுவதும் ஆபத்தானது. இவ் அறிவித்தலை ஏற்று பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதேசசபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.
