சகல வயதினருக்கும் ஆரோக்கியமான நல்வாழ்க்கையை உறுதிப்படுத்தல் என்ற நிலைபேறான அபிவிருத்தி இலக்கினை அடையும் பொருட்டு 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டிலிருந்து தாய் சேய் நலனினை மேம்படுத்தும் முகமாக கர்ப்பிணி தாய்மாருக்குரிய மகப்பேற்றுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு சபையின் செயலாளரின் தலைமையில் இன்று வலிகாமம் வடக்கு பிரதேசசபை தலைமையலுவலகத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் குடும்பநல உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டிருந்த நிலையில் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் வசிக்கும் 35 கர்ப்பிணி தாய்மார்களுக்கு தலா ரூபா 10,000.00 பெறுமதியான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
Author: webadmin
இடமாற்றம் பெற்றுச்செல்லும் உயர்திரு.ச.சிவஸ்ரீ ஐயாவுக்கு வலிகாமம் வடக்கு பிரதேச சபை சார்பாக பாராட்டுக்கள்
கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக வலிகாமம் வடக்கு பிரதேச செயலராகவிருந்து மீள்குடியேற்றம், பிரதேச அபிவிருத்தி மற்றும் செயலகத்தின் பல்வேறு வெற்றிகளுக்கு உழைத்து உச்ச சேவை வழங்கி 08/01/2024 முதல் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலராக இடமாற்றம் பெற்றுச்செல்லும் உயர்திரு.ச.சிவஸ்ரீ ஐயாவுக்கு வலிகாமம் வடக்கு பிரதேச சபை சார்பாக பாராட்டுக்களுடன் நன்றிகளையும் தெரிவித்துகொள்கின்றோம்.
📌 பொது அறிவித்தல் – 2024
📌 பொது அறிவித்தல் – 2024

நன்றிகளும் பாராட்டுதல்களும்
சமூகப்பொறுப்புடன் சேவையாற்றும் கருகம்பனை தமிழ்மன்றம் சனசமூக நிலையத்தினருக்கு நன்றிகளும் பாராட்டுதல்களும்

அலுவலக ஒளிவிழா நிகழ்வின் பதிவுகள் 🎄🎅✨️🎊🎈
அலுவலக ஒளிவிழா நிகழ்வின் பதிவுகள்
🎄🎅✨️🎊🎈
2022 ம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாத சிறப்பான செயற்பாடு
2022 ம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாத சிறப்பான செயற்பாடுகளுக்காக அளவெட்டி பொது நூலகத்திற்கு, தேசிய நூலகம் மற்றும் ஆவணவாக்கல் சபை மூலம் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அனர்த்த தடுப்பு நடவடிக்கை
அனர்த்த தடுப்பு நடவடிக்கையாக வெள்ளநீர் வடிந்தோட ஏதுவாக இயந்திரசாதனம் முலம் வாய்க்கால் ஆழப்படுத்தலும் அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றும் செயற்பாடும் சேந்தான்குள பிரதேசத்தில் இடம்பெற்றது.
இலத்திரனியல் குடிமக்கள் புள்ளி அட்டை (Electronic Citizen Report Card) E-CRC
இலத்திரனியல் குடிமக்கள் புள்ளி அட்டை (Electronic Citizen Report Card) E-CRC
உள்ளூராட்சி மன்றங்களினால் வழங்கப்படும் சேவைகளின் திருப்தி தொடர்பாக அறிந்து கொள்ளுதல், மக்களின் தேவைகளை அடையாளம் காணுதல் மற்றும் வருடாந்த வரவு செலவுத்திட்டத்தில் முன்னுரிமையளிக்க வேண்டிய விடயங்களை இனங்காணுதல் போன்ற நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக ஆசிய அமைப்பின் வழிகாட்டுதலின் கீழ் பயிற்சியளிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்ற உத்தியோகத்தர்களால் எமது சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களில் எழுமாற்றாக தெரிவு செய்யப்பட்டவர்களிடமிருந்து (100 – 120 பேர்) கிடைக்கப்பெற்ற கருத்துக்களை அடிப்படையாக கொண்டு பகுப்பாய்வு செய்ததன் மூலமாக கிடைக்கப்பெற்ற அறிக்கையினை எமது சபை உத்தியோகத்தர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலந்துரையாடலானது 2023.12.13 ஆம் திகதி எமது தலைமையலுவலகத்தில் இடம்பெற்றது. அக் கலந்துரையாடலின் பதிவுகள் மற்றும் கிடைக்கப்பெற்ற அறிக்கை என்பன பொதுமக்களின் அபிப்பிராயங்களை பெற்றுக் கொள்ளும் பொருட்டு தங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.





டெங்கு ஒழிப்பு 🦟🚫
டெங்கு ஒழிப்பு 🦟🚫
இன்றைய தினம் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்க வாலிபர்கள் இளவாலை கிராமத்தில் டெங்கு ஒழிப்பு செயல்திட்டத்தை சுயவூக்கத்தின் அடிப்படையில் மேற்கொண்டனர்.
நீர் தேங்கக்கூடிய டெங்கு நுளம்பு பரவ சாதகமான கொள்கலன்கள் சேகரிக்கப்பட்டு பிரதேசசபையிடம் ஒப்படைக்கப்பட்டது. மழையையும் பொருட்படுத்தாது பங்குகொண்ட வாலிபர்களுக்கும், சபை பணியாளர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். வலி வடக்கின் ஏனைய இளையோர் அமைப்பினரும் இவ்வாறான சூழல் சார் சமூக கடமைகளை ஆற்ற முன்வரவேண்டும் என்பதுடன் அதற்கு எப்போதும் பிரதேசசபை ஒத்துழைப்பை நல்க காத்திருக்கிறார்கள் என்பதையும் தங்களுக்கு அறியத்தருகின்றோம்.
