#வலிகாமம் வடக்கில் #காணி விடுவிப்பு
வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் மக்களின் ஒரு தொகுதி காணிகள் இன்று (10 ஆம் திகதி) (ஞாயிறு) யாழ் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் விடுவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி,
காங்கேசன்துறை மத்தி (J/234), காங்கேசன்துறை தெற்கு (J/235) கிராம சேவையாளர் பிரிவுகளில் 515 பிரிகேட் தலமையகம் அமைந்திருந்த,52 குடும்பங்களுக்கு சொந்தமான 20.32 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.
வறுத்தலைவிளான் (J/241)கிராம சேவையாளர் பிரிவில் (HQ 9- v ) SLLI படைப்பிரிவினர் நிலைகொண்டிருந்த 21 குடும்பங்களுக்குச் சொந்தமான 23.36 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.
தென்மயிலை (J/240) கிராம சேவையாளர் பிரிவில் கெமுனு வோச் படைப்பிரிவு நிலைகொண்டிருந்த 41 குடும்பங்களுக்குச் சொந்தமான 25.02 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
Category: நிகழ்வுகள்
உள்ளூராட்சி மன்றங்களுக்கான இணையத்தள உருவாக்கம்
🌐 உள்ளூராட்சி மன்றங்களுக்கான இணையத்தள உருவாக்கம்
CDLG திட்டத்தினூடாக உள்ளூராட்சி ஆணையாளரின் வழிகாட்டுதலில் வட மாகாணத்திற்குட்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான இணையத்தளங்கள் உருவாக்கப்பட்டு 2024.03.01 ஆம் திகதியன்று வட மாகாண கெளரவ ஆளுநர் அவர்களால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதற்கமைய எமது சேவைகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக எமது இணையத்தள முகவரியான Valikamamnorth.ps.gov.lk இனுள் பிரவேசிப்பதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
மேலும் இணையத்தள வடிவமைப்பில் பங்குபற்றிய உத்தியோகத்தர்களுக்கு குறித்த அங்குரார்ப்பண நிகழ்வில் மெச்சுரை வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
சமகால உலகிற்கேற்ப உள்ளூராட்சி சேவையை வலுப்படுத்தவும், அரசின் கொள்கை வழிகாட்டலுக்கமையவும் இன்று எமது சபையில் விரைவு எதிர்வினை (Quick Response ) QR மூலமாக கொடுப்பனவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சமகால உலகிற்கேற்ப உள்ளூராட்சி சேவையை வலுப்படுத்தவும், அரசின் கொள்கை வழிகாட்டலுக்கமையவும்
இன்று எமது சபையில் விரைவு எதிர்வினை (Quick Response ) QR மூலமாக கொடுப்பனவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தலைமையலுவலகம் மற்றும் உப அலுவலகங்களில் நாளைமுதல் QR மூலமாக கொடுப்பனவுகளை மேற்கொள்ளமுடியும் என்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.
நெய்தல் முன்பள்ளியின் 2024 புதிய மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா
வலி வடக்கு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள நெய்தல் முன்பள்ளியின் 2024 புதிய மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழாவின் பதிவுகள்
பொது அறிவித்தல்

சிவராத்திரி தினத்திற்கான தற்காலிக வியாபார நிலையங்கள் அமைப்பதற்கான இடங்களை ஏலத்தில் வழங்குதல்
கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய உற்சவகால தினங்களுக்கானதும் சிவராத்திரி தினத்திற்கான தற்காலிக வியாபார நிலையங்கள் அமைப்பதற்கான இடங்களை ஏலத்தில் வழங்குதல்
தேசிய வாசிப்பு மாதம் 2023
தேசிய வாசிப்பு மாதம் 2023 போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்ற
ம/கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி வித்தியாலய மாணவர்கள் .
தேசிய வாசிப்பு மாதம் 2023
தேசிய வாசிப்பு மாதம் 2023 போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்ற
ம/விசாலாட்சி வித்தியாலய மாணவர்கள் மற்றும் அதிபர் ஆசிரியர்களுடன். 
2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டிற்கமைவாக வாழ்வாதார உதவிகளை வழங்குவதனூடாக “அனைத்து வடிவங்களிலும் உள்ள வறுமையினை ஒழித்தல்”
2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டிற்கமைவாக வாழ்வாதார உதவிகளை வழங்குவதனூடாக “அனைத்து வடிவங்களிலும் உள்ள வறுமையினை ஒழித்தல்” என்ற நிலைபேறான அபிவிருத்தி இலக்கினை அடைந்து கொள்ளும் முகமாக சபை எல்லைக்குள் வதியும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட ஒருவருக்கு ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டன.
2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டிற்கமைவாக முதியோர் நலனோம்பு உதவிகள் வழங்குதல் ஊடாக எமது சபை எல்லைக்குள் வசிக்கும் ஒருவருக்கு “அடிப்படை சுகாதார வசதிகளை வழங்குவதனூடாக வாழ்விடங்களை மேம்மபடுத்தல்”
2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டிற்கமைவாக முதியோர் நலனோம்பு உதவிகள் வழங்குதல் ஊடாக எமது சபை எல்லைக்குள் வசிக்கும் ஒருவருக்கு “அடிப்படை சுகாதார வசதிகளை வழங்குவதனூடாக வாழ்விடங்களை மேம்மபடுத்தல்” என்ற எண்ணக்கருவிற்கமைவாக பயனாளியின் பங்களிப்புடன் சபை நிதியினையும் பயன்படுத்தியும் கழிப்பறை அமைப்பதற்கான உதவி வழங்கி வைக்கப்பட்டது.
