தேசிய வாசிப்பு மாதம் 2024

தேசிய வாசிப்பு மாதம் 2024 ஐ முன்னிட்டு வலிகாமம் வடக்கு பிரதேச சபை காங்கேசன்துறை உப அலுவலக பொது நூலகத்தால் சுற்றுச்சூழல் மற்றும் கடலோர தூய்மையாக்கல் மற்றும் எமது பிரதேசத்தை பிளாஸ்ரிக் அற்ற பிரதேசமாக மாற்றுவோம் எனும் தொனிப்பொருளில் பிளாஸ்ரிக் கழிவுகளை அகற்றும் நிகழ்வு நடைபெற்றபோது.

திண்மக்கழிவு சேகரிப்பு

விசேட திண்மக்கழிவு சேகரிப்பு நிகழ்ச்சி திட்டத்தின் தொடர்ச்சியாக நாளைய தினம் (2024.08.26) இடம்பெறவுள்ள கழிவு சேகரிப்பிற்காக நகுலேஸ்வரம், மாவிட்டபுரம் பகுதிகளில் வாழும் மக்களுக்கான விழிப்புணர்வு அறிவுறுத்தல்கள் இன்றைய தினம் பிரதேச சபையின் ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட வாகனத்தின் மூலம் வழங்கப்பட்டது.

சுற்றுச்சூழல் சமநிலை

சுற்றுச்சூழல் சமநிலையினை பேணுவதற்காகவும் எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பானதொரு சுற்றுச்சூழலை கையளிப்பதற்கும் Green layer & Rotary club ஆகிய அமைப்புக்கள் எமது சபையுடன் இணைந்து பொது தனியார் பங்களிப்பின் கீழ் கட்டுவன் மயிலிட்டி வீதியில் 100 மரங்கள் நடும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் சுன்னாகம் Rotary Club அங்கத்தவர்களுடன் இந்தியா Rotary Club அங்கத்தவர்கள், Green Layer அமைப்பினர் மற்றும் எமது சபையின் உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மரமொன்று வீதியின் குறுக்காக வீழ்ந்ததால்

கீரிமலை சேந்தான்குளம் பிரதான வீதியில் பழமை வாய்ந்த மரமொன்று வீதியின் குறுக்காக வீழ்ந்ததால்
வீதிப் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசெளகரியங்கள் உடனடியாக சபை பணியாளர்களால் நிவர்த்தி செய்யப்பட்டது.
பிரதான வீதியோரங்களில் ஆபத்தான மரங்கள் ஏதும் காணப்பட்டால் பொதுமக்கள் பிரதேச சபைக்கு தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பொது அறிவித்தல்

ஆடி அமாவாசை தினத்திற்கான தற்காலிக வியாபார நிலையங்கள் அமைப்பதற்கான இடங்களை ஏலத்தில் வழங்குதல் மற்றும் பிதிர்கடன் கிரியைகள் மேற்கொள்ளும் சிவாச்சாரியார்களை பதிவு செய்தல் தொடர்பான பொது அறிவித்தல்

பொது கழிப்பறையானது சபையால் புனரமைப்பு செய்யப்பட்டு பாவனைக்கு விடப்பட்டுள்ளது

யாத்திரிகை தலமாக வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட மாவை கந்தன் ஆலயத்தின் யாத்திரிகர்களின் நலன் கருதி ஆலயத்திற்கு அருகிலுள்ள பொது கழிப்பறையானது சபையால் புனரமைப்பு செய்யப்பட்டு பாவனைக்கு விடப்பட்டுள்ளதுடன் பொது நன்மை கருதி ஆலய வீதியும் செப்பனிடப்பட்டுள்ளது. கழிப்பறையை சரியான முறையில் பயன்படுத்துவதும் பேணுவதும் பொதுமக்களின் கடமையும் பொறுப்புமாகும்.

Translate »